வைத்திய கைமுறைகள்
건강/운동 | 2.6MB
1) வைத்தியக் கைமுறைகள் - முதலியார் சு. திருச்சிற்றம்பலவர் தொகுத்தது. தமிழகத்திலிருந்து, சித்த மருத்துவம், இலங்கை சென்று அங்குள்ள சில சிகிச்சைகளையும் சேர்த்து சிறு நூலாக சென்ற நூற்றாண்டில் வெளி வந்த நூல். இந் நூலின் சிறப்புரையில் கூறியுள்ளது போல், வைத்தியம் அறியாதவர்கள் மட்டுமின்றி, வைத்தியம் கற்கும் மாணாக்கர்களும் மிக உபயோகமான நூல்.
தலை முதல் கால் வரையிலான உடல் உறுப்புகள் அனைத்திலும் வரும் சிறு நோய்களுக்கு வீட்டிலிருந்தே அதிக செலவில்லாமல் அவரவர் தங்கள் நோய்களை தீர்த்துக் கொள்ள உதவும் நூல். முதல் உதவி, வைத்திய பழமொழிகள், விஷ முறிவுகள், மற்ற நூல்களில் இல்லாத சிகிச்சை முறைகள் ஆகியவையும் உள்ளன. அனுபவம் பெற்ற குடும்ப வைத்தியரால் எழுதப் பட்ட இந்நூல், தேவையான பொழுது அனைவர்க்கும் மிக உபயோகமாக இருக்கும்.
2) அகஸ்தியர் இரண வைத்தியம் - V A T ராஜன்
அனைத்துவித இரணங்கள், பல்வேறு தோல் நோய்கள், மற்றும் பல எளிய சிகிச்சைகள்.
3 அனுபவமுள்ள குடிநீர் வகைகள் - ஆசிரியர் வைத்தியாச்சாரி திரு. ஏ. சி. இராசையா.
இதில் பல்வேறு குடிநீர் வகைகளைப் பற்றி விரிவாக உள்ளன.
4 இராசசேகரம் - இந்நூல் சிங்கை அரசர்களின் பரம்பரையில் வந்த இளவரசர் உ.இ.ம. இராஜசேகரம் என்பவரால் எழுதப்பட்டது. இதன் மூன்று பதிப்புகள் வெளிவந்துள்ளன.
இது பெரிய பரிகாரியார் ஞாபகார்த்த சித்த மருத்துவ சங்கத்தால் வெளியிடப்பட்டது.
இதில் பரம்பரை வைத்தியம், குடிநீர் மற்றும் மூன்றாம் பதிப்பில், சித்தர்களின் மூலிகை மருத்துவம், மலர்களின் மருத்துவப் பயன்கள், பிணி, மருத்துவம், சுகவாழ்வு மற்றும் பல இணைக்கப்பட்டுள்ளன.
சிறு பிழை நீக்கம்